

புதுடெல்லி
முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நேற்றுநடந்த கூட்டத்தில் டி.டி.வி தினகரனின் அறிவிப்புகள் எதுவும் கட்சியை கட்டுப்படுத்தாது. டி.டி.வி தினகரனால் கட்சியின் எந்த பதவியையும் வகிக்க முடியாது என தீர்மானம் நிறைவேற்றபட்டது.
இதை தொடர்ந்து இன்று டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணயத்திடம் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தனர். நேற்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் நகலையும், பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்தனர்.
இது குறித்து முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி கூறியதாவது:-
தினகரன் துணை பொதுச்செயலாளராக பதவி வகிக்க இயலாது என்ற தீர்மானத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தோம் என கூறினார்.