

ஐதராபாத்,
ஐதாராபாத் நகரில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனை ஒன்றின் கார் பார்கிங் பகுதியில் கார் தாறுமாறாக ஓடியதில் 6 பேர் காயம் அடைந்துள்ளனர். மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் ஒருவர், தனது காரை பார்கிங் செய்து விடுமாறு பாதுகாவலரிடம் கார் சாவியை வழங்கியதும், காரை இயக்க தெரியாத பாதுகாவலர் தாறுமாறாக ஓட்டி பாதசாரிகள் கூட்டத்திற்குள் செலுத்தியதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் ஆறு பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்த ஆறு பேரில் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் ஆவர். இந்த சம்பவத்தால், மருத்துவ மனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.