முசாபர்பூர் விடுதி பாலியல் கொடுமை சிபிஐயின் அறிக்கை பயங்கரமாக - அச்சமூட்டுவதாக உள்ளது -சுப்ரீம் கோர்ட்

பீகார் மாநிலம் முசாபர்பூர் விடுதி பாலியல் கொடுமை சிபிஐயின் அறிக்கை பயங்கரமான அச்சமூட்டுவதாக உள்ளது என சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது.
முசாபர்பூர் விடுதி பாலியல் கொடுமை சிபிஐயின் அறிக்கை பயங்கரமாக - அச்சமூட்டுவதாக உள்ளது -சுப்ரீம் கோர்ட்
Published on

புதுடெல்லி

பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள விடுதி ஒன்றில் சுமார் 44 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் கண்ணீர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அரசின் நிதியுதவி பெற்று செயல்பட்டு வரும் இந்த விடுதியில் தங்கியிருந்த 44 சிறுமிகளில் 29 பேர் பாலியல் வன்கெடுமைக்கு ஆளாகியிருப்பதாக தெரியவந்தது. விடுதியில் இருப்பவர்களால் வன்கெடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமிகளில் சிலருக்கு கரு உருவாகியுள்ளது, அதனை கலைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த பாலியல் துஷ்பிரயோகம் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி . ரஞ்சித் ரஞ்சன் பேசினார். இதற்கு பதில் அளித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநில அரசு பரிந்துரைத்தால் சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு அனுமதிக்கும் என்று கூறினார்.

இந்த நிலையில் பீகார் மாநில முசாபர்பூர் விடுதி பாலியல் துஷ்பிரயோகம் குறித்த விசாரணையை சிபிஐக்கு மாற்ற மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார் உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில் பல பெண்கள் கற்பழிப்பு மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட முசாபர்பூர் விடுதி விசாரணைக்கு உட்படுத்துவதற்குமுன், பயங்கரமான" விவரங்களை உச்ச நீதிமன்றம் சுப்ரீம் கோர்ட் முன் வைத்து உள்ளது.

நீதிபதி மதன் பி. லோகூர் நீதிபதிகள் எஸ்.அப்துல் நசீரின் தீபக் குப்தா அமர்வு முன்பு சிபிஐ முதல் கட்ட அறிக்கையை தாக்கல் செய்தது. இதனை சுப்ரீம் கோர்ட் "இது என்ன நடக்கிறது? இது பயங்கரமானது ". என கூறியது.

விடுதி உரிமையாளரான பிரஜேஷ் தாகூருக்கு எதிராக சிபிஐ குறிப்பிடும் குற்றச்சாட்டுகளை உச்ச நீதிமன்றமும் கவனத்தில் எடுத்துக் கொண்டது. அவர் ஏன் மாநிலத்திற்கு வெளியே சிறைக்கு மாற்றப்படக்கூடாது என்று கேட்டு விளக்கமளிக்க கோரி உள்ளது.

தாக்கூர் ஒரு செல்வாக்குள்ளவர் என்று சிபிஐ தனது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார். அவர் ஜெயிலில் இருந்தபோது அவரிடம் இருந்து போன் கைபற்றபட்டது என கூறியது. இதனால் தாக்கூர் ஒரு செல்வாக்குள்ளவர் என்று பெஞ்ச் குறித்து கொண்டது.

முன்னாள் மந்திரி மன்ஜூ வர்மாவின் கணவர் சந்திரசேகர் வர்மாவின் இடத்தை கண்டுபிடிப்பதற்கான தாமதத்தை விளக்க உச்ச நீதிமன்றம் பீகார் அரசு மற்றும் சிபிஐக்கு உத்தரவிட்டது. கோர்ட் இந்த வழக்கை விசாரித்த சிபிஐ குழு அக்டோபர் 30 ம் தேதி வரை மாற்றப்படக்கூடாது என்றும், இந்த விஷயத்தை விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com