

புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் நாளையும் (வெள்ளிக்கிழமை), 1-ந் தேதியும் (திங்கட்கிழமை) சில முக்கிய மசோதாக்கள் ஓட்டெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
எனவே, மேற்கண்ட 2 நாட்களும் பா.ஜனதா எம்.பி.க்கள் அனைவரும் கண்டிப்பாக சபையில் இருக்குமாறு அவர்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 542 உறுப்பினர்களை கொண்ட மக்களவையில் பா.ஜனதாவுக்கு 303 உறுப்பினர்கள் உள்ளனர்.