நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட பெண் சாமியார் பிரக்யா தாக்கூருக்கு வாய்ப்பு மறுப்பு

சமீபத்தில் வெளியான பா.ஜனதா முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் பெண் சாமியார் பிரக்யா தாக்கூர் பெயர் இடம் பெறவில்லை.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட பெண் சாமியார் பிரக்யா தாக்கூருக்கு வாய்ப்பு மறுப்பு
Published on

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் போபாலில் இருந்து நாடாளுமன்றத்துக்கு பா.ஜனதா சார்பில் தேர்ந்து எடுக்கப்பட்டவர் பிரக்யா தாக்கூர். பெண் சாமியாரான இவர், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். மகாத்மா காந்தி குறித்து இவர் கூறிய கருத்துகள் எதிர்கட்சிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சமீபத்தில் வெளியான பா.ஜனதா முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் பெண் சாமியார் பிரக்யா தாக்கூருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதற்கு இவரது சர்ச்சை கருத்துகள்தான் காரணம் என்று கூறப்படுகிறது. சீட் வழங்கப்படாதது குறித்து பிரக்யா தாக்கூர் கூறுகையில், தேர்தல் வாய்ப்பு குறித்து கட்சியும், பிரதமர் மோடியும் மறு பரிசீலனை செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இருப்பினும் இந்தியாவை இந்துநாடாக உருவாக்க தொடர்ந்து பாடுபடுவேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com