விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை தராதது ஏன்? தமிழிசை கேள்வி

விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை தராதது ஏன்? என பா.ஜனதா தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பி உள்ளார்.
விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை தராதது ஏன்? தமிழிசை கேள்வி
Published on

சென்னை,

தேர்தலுக்கு ஒருநாள் முன்பாக ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டது பெரும் சர்ச்சையாகி உள்ளது. இவ்விவகாரத்தை கையில் எடுத்து உள்ள தேர்தல் ஆணையம் நடவடிக்கையை தொடங்கி உள்ளது.

ஜெயலலிதா சிகிச்சை வீடியோ விவகாரம் தொடர்பாக ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி பிரவீன் நாயரின் புகாரின்பேரில், வெற்றிவேல் மீது புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. வீடியோ வெளியிடப்பட்டது அரசியல் கட்சிகளால் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

பா.ஜனதா தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை தராதது ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளார். வீடியோ வெளியிட்டது வெறுக்கத்தக்க செயலாகும். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவரை வீடியோ எடுப்பது என்பது சட்டப்படி தவறான செயலாகும். நாளை தேர்தல் என்ற நிலையில், சுயநலத்துக்காக ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது. ஜெயலலிதாவின் பெருமையை சீர்குலைக்கும் செயலாகும் என குற்றம் சாட்டிஉள்ளார் தமிழிசை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com