

புதுடெல்லி
குஜராத் தேர்தலில் எம்.எல்.ஏவாக தேர்ந்து எடுக்கப்பட்ட ஜிக்னேஷ் மேவானி மும்பையில் பேரணி நடத்த தடை வித்திக்கபட்டது. இது குறித்து அவர் கூறும் போது மத்திய அரசு தன்னை குறிவைத்து உள்ளதாக கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த வன்முறை குறித்து தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.
எனது பேச்சில் ஒருவார்த்தை கூற வன்முறையை தூண்டும் விதமாக இல்லை. நான் குறிவைக்கப்பட்டு உள்ளேன். என் உரையில் எந்த ஒரு பகுதியும் ஆத்திரமூட்டுவதாகவோ அல்லது வன்முறையை தூண்டுவதாகவோ இல்லை.
நான் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதி. பாரதீய ஜனதா என்னை பயமுறுத்துகிறது. நான் சாதியற்ற இந்தியாவை விரும்புகிறேன்.தலித்துகள் போராட்டம் நடத்த உரிமை இல்லையா? "என கூறினார்.
#JigneshMevani / #castelessIndia / #GujaratMLA