ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் ஒருமித்த கருத்து ஏற்பட பேச்சுவார்த்தை நடத்துவோம் : வெங்கையா நாயுடு

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் ஒருமித்த கருத்து ஏற்பட அனைத்து கட்சிகளிடத்திலும் பாஜக பேச்சுவார்த்தை நடத்தும் என்று வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் ஒருமித்த கருத்து ஏற்பட பேச்சுவார்த்தை நடத்துவோம் : வெங்கையா நாயுடு
Published on

புதுடெல்லி,

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த மாதம் 25ந் தேதி முடிகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், அடுத்த மாதம் 17ந் தேதி நடக்கிறது. எதிர்க்கட்சிகளின் ஒருமித்த கருத்துடன் பொது வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த பாரதீய ஜனதா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி வெங்கையா நாயுடு ஆகிய மூன்று மத்திய மந்திரிகள் அடங்கிய குழுவை பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா நேற்று அறிவித்தார்.

இந்த குழுவில் இடம் பெற்றுள்ள மத்திய மந்திரி வெங்கையா நாயுடு இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- நாங்கள் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேசுவோம். இந்த பிரச்சினை குறித்து நாங்கள் எங்களுக்குள் விவாதித்து இருக்கிறோம். வரும் நாட்களில் அனைத்து கட்சிகளுடனும் நாங்கள் பேச்சு நடத்துவோம். நாங்கள் ஒவ்வொருவரையும் சந்திப்போம். இதில், ஒவ்வொருவரையும் சேர்த்துக்கொள்ளும் செயல்முறையை இப்போதுதான் தொடங்கி இருக்கிறோம். முழுமையான ஜனநாயக உணர்வுடன் இதை செய்து முடிப்போம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com