

இம்பால்,
மணிப்பூர் மாநிலம் இம்பால் நகரில், தங்கல் மார்க்கெட் பகுதியில் நேற்று அதிகாலை பயங்கர சத்தத்துடன் குண்டு ஒன்று வெடித்தது. அதிகாலை என்பதால் கடைகள் அனைத்தும் மூடிக்கிடந்தன. ஆள்நடமாட்டமும் இல்லை. இதனால் உயிர் சேதம் இல்லை. வரிசையாக இருந்த சில கடைகளில் உள்ள கதவுகள் மட்டும் சேதம் அடைந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். குண்டு வெடிப்பு நடந்த பகுதியை சுற்றி வளைத்தனர். குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி விசாரணை நடந்து வருகிறது.