

புதுடெல்லி,
டெல்லியின் தென்மேற்கே வசித்து வந்த சிறுவன் ஏகான்ஷ் (வயது 12). அவன் தனது நண்பன் ஒருவனின் வீட்டிற்கு சென்றுள்ளான். அப்பொழுது நண்பனின் பெற்றோர் வீட்டில் இல்லை. இந்த நிலையில் ஏகான்ஷின் நண்பன், சகோதரிக்கு தண்ணீர் எடுத்து கொண்டு வந்துள்ளான்.
இந்நிலையில், ஏகான்ஷ் இருந்த அறையில் இருந்து துப்பாக்கி குண்டு வெடித்த சத்தம் கேட்டுள்ளது. இதனை தொடர்ந்து நண்பன் தனது தந்தையை அழைத்துள்ளான். வீட்டுக்கு அருகில் வசிப்போரையும் தொடர்பு கொண்டுள்ளான்.
அவர்கள் உடனடியாக ஏகான்ஷை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவன் இறந்து விட்டான்.
ஏகான்ஷின் பெற்றோர் யார் மீதும் குற்றச்சாட்டு தெரிவிக்கவில்லை. இதுபற்றி ஏகான்ஷின் நண்பனின் தந்தை மீது போலீசார் வழக்கு ஒன்றை பதிவு செய்து உள்ளனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.