

அலகாபாத்,
உத்தரபிரதேச மாநிலத்தில் அலகாபாத் பல்கலைக்கழகத்திற்கு வெளியே விடுதி அருகே பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ராஜேஷ் யாதவ் சுட்டுக் கொல்லப்பட்டார். ராஜேஷ் யாதவ் அவருடைய நண்பர் டாக்டர் முகுல் சிங்கை சந்தித்து பேச சென்று உள்ளார், அப்போது அங்கிருந்த சிலருடன் வாக்குவாதம் நேரிட்டு உள்ளது. இதனையடுத்து அவரை கும்பல் ஒன்று துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது. உடனடியாக அவருடை ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சாலையில் சென்ற பஸ்க்கு தீ வைத்தனர். வாகனங்கள், கடைகள் நொறுக்கப்பட்டது. அதிகாலை 2:30 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டார் என டாக்டர் முகுல் சிங் போலீசில் கூறிஉள்ளார்.
ராஜேஷ் வயிற்றில் குண்டு பாய்ந்து உள்ளது, காயம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர், ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இரு பஸ்கள் தீ வைக்கப்பட்டதாக உள்ளூர் மீடியாக்கள் செய்தி வெளியிட்டு உள்ளது. மருத்துவமனையும் பகுஜன் சமாஜ் கட்சியினரால் தாக்கப்பட்டு உள்ளது. போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர் ராஜேஷ் யாதவ்.