

புதுடெல்லி,
லண்டனில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அந்நாட்டு எம்.பி.க்கள், தலைவர்கள் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியில் பேசினார். அப்போது, 1984-ல் சீக்கிய எதிராக நடந்த வன்முறைகள் மிகவும் வேதனை அளிக்கக் கூடிய சேகமாகும். இதில் தெடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பதில் 100 சதவீதம் ஆதரவாக இருப்பேன். அதேநேரத்தில் அந்த கலவரத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தெடர்பு இல்லை என்று கூறுகிறேன். எந்த ஒரு மனிதருக்கு எதிராகவும் வன்முறையில் ஈடுபடுவது தவறு என்று கருதுகிறேன் என்று குறிப்பிட்டார்.
ராகுல் காந்தியின் பேச்சுக்கு பா.ஜனதா மற்றும் அகாலிதளம் தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் 1984 சீக்கியருக்கு எதிரான கலவரத்தில் காங்கிரசுக்கு தொடர்பில்லை என்ற ராகுல் காந்தியின் கருத்துக்கு அமரீந்தர் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி ஒருபோதும் கலவரத்தில் ஈடுபடவில்லை என்பதை நான் கூறுகிறேன். காங்கிரசிலிருந்து சிலர்தான் இதில் ஈடுபட்டுள்ளனர். வெளிப்படையாகவே ஈடுபட்டவர்கள் என்று சஜ்ஜன் குமார், தார்மாதாஸ் சாஸ்திரி, அர்ஜுன் தாஸ் மற்றும் பிற இருவர்தான் இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள், என கூறியுள்ளார் அமரீந்தர் சிங்.