அகஸ்டா வெஸ்ட்லேண்ட்: சோனியா காந்தியை சிக்கவைக்க மத்திய அரசு சதிதிட்டம் - காங்கிரஸ்

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில் சோனியா காந்தியை சிக்கவைக்க தரகரை மத்திய அரசு பயன்படுத்துகிறது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
அகஸ்டா வெஸ்ட்லேண்ட்: சோனியா காந்தியை சிக்கவைக்க மத்திய அரசு சதிதிட்டம் - காங்கிரஸ்
Published on

புதுடெல்லி,

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், ரூ.362 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இவ்வழக்கு விசாரணை தொடர்பான செய்திகள் எதுவும் வெளியாகாத நிலையில் காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில் சோனியா காந்தியை சிக்கவைக்க தரகரை மத்திய அரசு பயன்படுத்துகிறது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில் இரண்டு தினங்களுக்கு முன்னர் கிறிஸ்டியன் மைக்கேல் துபாயில் கைது செய்யப்பட்டார். இப்போது மோடி அரசு மற்றும் அதனுடைய விசாரணை முகமைகள் சோனியா காந்தியின் பெயரையும் சேர்க்கும் வகையில் போலியான வாக்குமூலத்தை கொடுக்க கிறிஸ்டியன் மைக்கேலை கட்டாயப்படுத்தி வருகிறது என்று அவருடைய வழக்கறிஞர் ரோஸ்மேரி பாத்ரிஸி தெளிவாக கூறியுள்ளார், என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com