

மும்பை,
மும்பையில் கடந்த ஜூன் 9-ந் தேதி மழைக்காலம் தொடங்கியது. இதில் பருவ மழை தொடங்கிய முதல் நாளே பலத்த மழையால் நகரமே வெள்ளக்காடானது. அதன்பிறகு சில நாட்களுக்கு மழை நீடித்தது. இந்தநிலையில் கடந்த 2 வாரங்களாக நகரில் பொய அளவில் மழை பெய்யவில்லை. இதனால் வெப்பநிலை அதிகரித்தது.
இந்தநிலையில் பல நாட்களுக்கு பிறகு நேற்று மும்பையில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக காலை நேரத்தில் மழை கொட்டி தீர்த்தது. இதில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மும்பை நகரில் சராசரியாக 26.61 மி.மீ. மழை பெய்தது.
இந்தநிலையில் அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு மராட்டியத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி சுபாங்கி புடே கூறுகையில், வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த மராட்டியத்தில் அடுத்த 4, 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். ஒரு சில இடங்களில் இடியுடன், கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றா.