புகுஷிமா அணுமின் நிலைய கழிவுநீர் விவகாரம்: சீனாவில் இருந்து ஜப்பானுக்கு தொடர் மிரட்டல்

புகுஷிமா அணுமின் நிலைய கழிவுநீர் விவகாரம் தொடர்பாக சீனாவில் இருந்து ஜப்பானுக்கு தொடர் மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
புகுஷிமா அணுமின் நிலைய கழிவுநீர் விவகாரம்: சீனாவில் இருந்து ஜப்பானுக்கு தொடர் மிரட்டல்
Published on

டோக்கியோ,

ஜப்பானில் உள்ள புகுஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை பசிபிக் பெருங்கடலில் கலக்க ஜப்பான் அரசாங்கம் திட்டமிட்டது. இது சுற்றுச்சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறி சீனா, தென்கொரியா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் இந்த கழிவுநீர் சர்வதேச பாதுகாப்பு தரங்களுடன் ஒத்துபோவதாகவும், இதனால் மக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும் சர்வதேச அணுசக்தி நிறுவனம் தெரிவித்தது.

இந்தநிலையில் கடந்த 24-ந்தேதி முதல் புகுஷிமா அணுமின் நிலையத்தின் கழிவுநீர் கடலில் கலக்கப்படுகிறது. இதன்பிறகு சீனாவில் இருந்து தொலைபேசி மூலம் பல்வேறு மிரட்டல்கள் வருவதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதுபோன்ற அழைப்புகளை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி ஜப்பான் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் சீனாவில் உள்ள ஜப்பானிய குடிமக்கள் மற்றும் தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி ஜப்பான் வெளியுறவு அமைச்சகம் சீன அரசாங்கத்தை வலியுறுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com