

விசாகப்பட்டினம்,
ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் நகரில் அமைந்துள்ள விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் பெண் ஒருவரிடம் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.
அதில், அவரது கைப்பையில் 13 துப்பாக்கி குண்டுகள் இருந்தது தெரிய வந்தது. அவர் விசாகப்பட்டினத்தில் இருந்து ஐதராபாத் நோக்கி பயணித்துள்ளார். இதனை தொடர்ந்து, விமான நிலைய போலீசார் ஆயுத சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.