

கொச்சி,
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த சூழலில் மணிப்பூர் மாநில கவர்னர் நஜ்மா ஹெப்துல்லா கேரளா வந்திருந்தார்.
அவர் நேற்று லட்சத்தீவு செல்வதற்காக கொச்சி அருகே உள்ள நெடும்பாசேரி விமான நிலையத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார். ஆலுவா அருகே அவரது கார் வந்தபோது ஏராளமான இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் அவரது காரை வழிமறித்து கருப்புக்கொடி காட்டினர்.
இதைத்தொடர்ந்து போலீசார் வந்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதன் பின்னரே நஜ்மா ஹெப்துல்லா விமான நிலையத்துக்கு செல்ல முடிந்தது.
மணிப்பூர் கவர்னருக்கு கருப்புக்கொடி காட்டப்பட்ட சம்பவம் கொச்சியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.