கொரோனா பாதிப்புகள்: ஜார்க்கண்டில் 10, 12ம் வகுப்பு மாநில வாரிய தேர்வுகள் ரத்து

கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு ஜார்க்கண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாநில வாரிய தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
கொரோனா பாதிப்புகள்: ஜார்க்கண்டில் 10, 12ம் வகுப்பு மாநில வாரிய தேர்வுகள் ரத்து
Published on

ராஞ்சி,

ஜார்க்கண்டில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன. இதனால், சில தளர்வுகளுடன் வருகிற 16ந்தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு உள்ளன.

இதேபோன்று, மாலை 4 மணிவரை கடைகள் திறந்திருக்க அனுமதிக்கப்படும். இந்நிலையில், கொரோனா தொற்று உயர்வை முன்னிட்டு 10 மற்றும் 12ம் வகுப்பு மாநில வாரிய தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

இதுபற்றி அரசு சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அதிகாரப்பூர்வ அரசு அறிவிப்பில், இந்த பருவத்தில் நடைபெற வேண்டிய 10 மற்றும் 12ம் வகுப்பு மாநில வாரிய தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன. இந்த முடிவை முதல் மந்திரி ஹேமந்த் சோரன் எடுத்துள்ளார்.

கடந்த 1ந்தேதி, நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளால் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற சூழலால், மத்திய அரசு 12ம் வகுப்புகளுக்கான சி.பி.எஸ்.இ. தேர்வை ரத்து செய்திருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com