

பெங்களூரு,
கர்நாடகாவில், வரும் 14 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொற்று பரவலும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.இந்நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்டு, வாழ்வாதாரத்துக்கு உதவ வேண்டும் என்று பலரும் வலியுறுத்துகின்றனர்.
இந்த நிலையில், செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த கர்நாடக வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும். அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளின் திறப்பு நேரத்தை அனுமதிப்பது, பூங்காக்களை திறப்பது குறித்து முடிவுகள் எடுக்கப்படும். இதுகுறித்த அறிவிப்பை முதல்-மந்திரி எடியூரப்பா வெளியிடுவார் என்றார்.