பிபோர்ஜாய் புயல் மிக தீவிர புயலாக வரும் 15-ந்தேதி கரையை கடக்கும்: இந்திய வானிலை மையம்

மிக தீவிர புயலான பிபோர்ஜாய், வரும் 15-ந்தேதி கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
பிபோர்ஜாய் புயல் மிக தீவிர புயலாக வரும் 15-ந்தேதி கரையை கடக்கும்: இந்திய வானிலை மையம்
Published on

புதுடெல்லி,

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு 'பிபோர்ஜோய்' என்று பெயரிடப்பட்டுள்ளது. வங்கதேசம் வழங்கியுள்ள 'பிபோர்ஜோய்' என்ற பெயருக்கு ஆபத்து என்பது பொருளாகும்.

இந்த புயல் வலுப்பெற்று வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது என்றும், இந்த புயலால் கேரளா முதல் மராட்டிய மாநிலம் வரையிலான நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மழை தீவிரமடையும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கூறினர்.

இந்த நிலையில், பிபர்ஜாய் புயல். மணிக்கு 5 கிமீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்வதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. தற்போது இந்த புயல் மும்பைக்கு சுமார் 600 கிலோமீட்டர் மேற்கிலும், கராச்சிக்கு தெற்கே 830 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

இந்திய வானிலை ஆய்வுமையத்தின் கூற்றுப்படி, மிகக் கடுமையான சூறாவளி புயல் "பிபோர்ஜாய்" கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகர்ந்து ஜூன் 15 ந்தேதி பிற்பகலில் பாகிஸ்தான் மற்றும் அதை ஒட்டிய சவுராஷ்டிரா மற்றும் கட்ச் கடற்கரைகளை கடக்கும் என்று கூறியுள்ளது.

புயல் காரணமாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com