ஜம்மு-காஷ்மீர் முதல்-மந்திரியாக பதவியேற்ற உமர் அப்துல்லாவுக்கு தலாய் லாமா வாழ்த்து

ஜம்மு-காஷ்மீர் முதல்-மந்திரியாக பதவியேற்ற உமர் அப்துல்லாவுக்கு தலாய் லாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் முதல்-மந்திரியாக பதவியேற்ற உமர் அப்துல்லாவுக்கு தலாய் லாமா வாழ்த்து
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக உமர் அப்துல்லா நேற்று பதவியேற்றுக் கொண்டார். இதையொட்டி அவருக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் உமர் அப்துல்லாவுக்கு புத்த மதத்தின் தலைவராக அறியப்படும் திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய் லாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "ஷேக் அப்துல்லாவின் காலத்தில் இருந்து உங்களது குடும்பத்தின் மூன்று தலைமுறைகளை அறியும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. நமது நட்பை நான் பொக்கிஷமாக கருதுகிறேன்.

உங்களுக்கு முன்னால் இருக்கும் சவால்களை எதிர்கொண்டு நீங்கள் வெற்றிபெற வேண்டும் எனவும், ஜம்மு-காஷ்மீர் மக்களின் நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமைய வேண்டும் எனவும் வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com