கடன் தொல்லை: புதுச்சேரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை...!

கடன் தொல்லை காரணமாக புதுச்சேரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
Published on

புதுச்சேரி,

புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பம் தபால்காரர் வீதியில் ஆட்டோ ஒட்டுநர் தியாகராஜன் அவரது மனைவி செல்வி, 8 வயது மகள் லெட்சுமி தேவி, 5 வயது மகன் ஆகாஷ் ஆகியோர் தனியாக வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், ஆட்டோ ஓட்டுநர் தியாகராஜனுக்கு கடன் தொல்லை உள்ளிட்ட பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்பட்டுகிறது.

இந்நிலையில், நேற்று இரவு முதல் இன்று காலை வரை குடும்பத்தினர் வெளியே வரததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் ஜன்னலை திறந்து பார்த்தபோது நான்கு பேரும் உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆட்டோ ஓட்டுநர் தியாகராஜன் கடன் தொல்லை காரணமாக மனைவி 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com