பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியுடன் ராம்நாத்கோவிந்த் சந்திப்பு

பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியை தேஜகூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ராம்நாத்கோவிந்த் சந்தித்தார்.
பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியுடன் ராம்நாத்கோவிந்த் சந்திப்பு
Published on

புதுடெல்லி,

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவி காலம் முடிவடைவதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க அடுத்த மாதம் 17-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல், வருகிற 28-ந் தேதி முடிவடைகிறது. இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஒருமித்த கருத்துடன் பொது வேட்பாளரை நிறுத்த பா.ஜனதா முயற்சி மேற்கொண்டது.

திடீரென, பா.ஜனதா கூட்டணி வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டார். அவரை ஆதரிக்க முடியாது என்று பல்வேறு எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.எதிர்க்கட்சிகள் நாளை (வியாழக்கிழமை) கூடி ஆலோசனை நடத்துகின்றன. எனவே, எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று தெரிகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ராம்நாத்கோவிந்திற்கு ஆதரவாக மத்திய மந்திரிகள் ஆதரவு கோரி வருகின்றனர். இந்த நிலையில்,பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷியை ராம்நாத்கோவிந்த் இன்று சந்தித்தார். அத்வானியையும் ராம்நாத்கோவிந்த் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com