உத்தவ் தாக்கரேவின் பேச்சு, மற்றொரு பழிசுமத்தும் வெடிகுண்டு- பட்னாவிஸ்

சிவசேனா பொதுக்கூட்டத்தில் உத்தவ் தாக்கரேவின் பேச்சு, மற்றொரு பழிசுமத்தும் வெடிகுண்டு என தேவேந்திர பட்னாவிஸ் விமர்சித்து உள்ளார்.
உத்தவ் தாக்கரேவின் பேச்சு, மற்றொரு பழிசுமத்தும் வெடிகுண்டு- பட்னாவிஸ்
Published on

உத்தவ் தாக்கரே பேச்சு

சிவசேனா கட்சியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் மும்பை பாந்திரா குர்லா காம்ப்ளக்சில் நடந்தது. கூட்டத்தில் பேசிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மத்திய பா.ஜனதா அரசையும், மாநில எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ராஜ் தாக்கரேயை கடுமையாக விமர்சித்து பேசினார்.

குறிப்பாக மாநிலத்தை ஆட்சி செய்யும் கட்சிகளின் தலைவர் மீது பொய் வழக்குகளை போடுவதை நிறுத்தவில்லை என்றால், மாநில அரசும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தாமல் பா.ஜனதாவினர் மீது இரக்கமின்றி நடவடிக்கை எடுக்கும் என எச்சரித்து இருந்தார். இதேபோல மத்திய அரசு காஷ்மீர் பண்டித்களுக்கு பாதுகாப்பு அளிக்காமல், மராட்டியத்தில் உள்ள கிரித் சோமையா போன்ற பா.ஜனதாவினருக்கு பாதுகாப்பு வழங்கி வருவதாக கூறினார். மேலும் பயங்கரவாதி தாவூத் இப்ராகிம் பா.ஜனதாவில் சேர்ந்தால், அவர் கூட மந்திரியாகி விடுவார் என விமர்சித்தார்.

பட்னாவிஸ் விமாசனம்

உத்தவ் தாக்கரேவின் இந்த பேச்சு குறித்து எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், "இதுவும் மற்றொரு பழிசுமத்தும் வெடிகுண்டாக மாறி உள்ளது. அதற்கு தக்க பதிலடி கிடைக்கும்" என டுவிட்டரில் கூறியுள்ளார்.

இதேபோல நவநிர்மாண் சேனா தலைவர் அவினாஷ் அபயங்கரும் உத்தவ் தாக்கரேவின் பேச்சை டுவிட்டரில் விமாசித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com