தீவிரவாத தாக்குதலில் இருந்து அமர்நாத் யாத்ரீகர்களை பாதுகாத்த பேருந்து ஓட்டுநருக்கு வீரதீர செயலுக்கான விருது

தீவிரவாத தாக்குதலில் இருந்து அமர்நாத் யாத்ரீகர்களை பாதுகாத்த பேருந்து ஓட்டுநருக்கு நாட்டின் 2வது உயரிய பொதுமக்களுக்கான வீரதீர செயலுக்கான விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. #Delhi
தீவிரவாத தாக்குதலில் இருந்து அமர்நாத் யாத்ரீகர்களை பாதுகாத்த பேருந்து ஓட்டுநருக்கு வீரதீர செயலுக்கான விருது
Published on

புதுடெல்லி,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பேடென்கூ பகுதியருகே அமர்நாத் யாத்ரீகர்களை ஏற்றி கொண்டு பேருந்து ஒன்று கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 10ந்தேதி சென்று கொண்டிருந்தது. அதனை ஷேக் சலீம் கஃபுர் என்பவர் ஓட்டி சென்றார். அதன்மீது திடீரென தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 7 அமர்நாத் யாத்ரீகர்கள் கொல்லப்பட்டனர். 14 பேர் காயமடைந்தனர். தீவிரவாதிகளின் தாக்குதலை உணர்ந்த ஓட்டுநர் தைரியமுடன் பேருந்தினை ஓட்டி சென்று மற்ற 52 பயணிகளை காயமின்றி காப்பாற்றினார்.

குடியரசு தினம் வருவதனை முன்னிட்டு உள்துறை அமைச்சகம் பொதுமக்களுக்கான வீரதீர செயலுக்கான உத்தம் ஜீவன் ரக்ஷா பதக் என்ற 2வது உயரிய விருதினை சலீமுக்கு அறிவித்து உள்ளது. இந்த விருதுடன் ரூ.1 லட்சம் பணமும் வழங்கி கவுரவிக்கப்படும்.

சர்வோட்டம் ஜீவன் ரக்ஷா பதக் பொதுமக்களுக்கு வழங்கப்படும் வீரதீர செயலுக்கான உயரிய விருது ஆகும்.

#Delhi #terrorist #Kashmir

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com