குடிபோதையில் காரை ஓட்டிய நபர்; பைக், வேன் மீது மோதியதில் 2 பேர் பலி


குடிபோதையில் காரை ஓட்டிய நபர்; பைக், வேன் மீது மோதியதில் 2 பேர் பலி
x

கோப்புப்படம்

தினத்தந்தி 8 March 2025 11:15 PM IST (Updated: 9 March 2025 12:57 PM IST)
t-max-icont-min-icon

இந்த விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாட்னா,

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஜக்தியோ சாலையில் நேற்று இரவு நேரத்தில் கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த கார் ஒரு பைக் மீதும் பின்னர் வேன் மீதும் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் பைக்கில் பயணித்த தம்பதி படுகாயமடைந்தனர். மேலும் வேனில் இருந்த 4 பேரும் காயமடைந்தனர். விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படனர்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் விபத்தை ஏற்படுத்திய காரினை பறிமுதல் செய்தனர். பின்னர் காரின் ஓட்டுநர் குடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி இந்த விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த நபரை கைது செய்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி தம்பதி இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் வேனில் இருந்த 4 பேரின் உடல் நிலை சீராக உள்ளதாக கூறப்படுகிறது.

1 More update

Next Story