பிரதமர் மோடி பெற்ற பரிசு பொருட்கள் ஏலம் - மத்திய கலாச்சார அமைச்சகம் அறிவிப்பு

பிரதமர் மோடி பெற்ற பரிசு மற்றும் நினைவுப் பொருட்களை ஏலம் விடும் நடைமுறையை மத்திய கலாச்சார அமைச்சகம் தொடங்கியுள்ளது.
பிரதமர் மோடி பெற்ற பரிசு பொருட்கள் ஏலம் - மத்திய கலாச்சார அமைச்சகம் அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

பிரதமர் மோடி தான் பெறும் பரிசுப் பொருட்களை ஏலம் விட்டு அதன் மூலம் கிடைக்கும் நிதியை அரசின் திட்டங்களுக்கு வழங்கி வருகிறார். அந்த வகையில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 1,330 பொருட்களை ஏலம் விட இணையதளம் வாயிலாக நடத்தப்படும் மின்னணு ஏல முறை(E-auction) நேற்று தொடங்கப்பட்டது.

இந்த மின்னணு ஏலத்தில் பங்கேற்போர், இணையதளம் மூலம் அக்டோபர் 7 ஆம் தேதி வரை பங்கேற்கலாம் என மத்திய கலாச்சார அமைச்சகம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் https://pmmementos.gov.in என்ற இணையதளம் வாயிலாக இந்த மின்னணு ஏலத்தில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றோர் அளித்த விளையாட்டு சாதனங்கள், சிற்பங்கள், ஓவியங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் ஏலம் விடப்பட உள்ளன. இதன் மூலம் கிடைக்கும் நிதி, கங்கை நதியை தூய்மைப்படுத்தும் நவாமி கங்கா திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com