இந்தியா வருவதற்கு முன் உங்கள் நாட்டிலேயே மாட்டிறைச்சி சாப்பிட்டுவிடுங்கள்: சுற்றுலாத்துறை மந்திரி சொல்கிறார்

இந்தியா வருவதற்கு முன் உங்கள் நாட்டிலேயே மாட்டிறைச்சி சாப்பிட்டுவிடுங்கள் என்று சுற்றுலாத்துறை மந்திரி பேசினார்.
இந்தியா வருவதற்கு முன் உங்கள் நாட்டிலேயே மாட்டிறைச்சி சாப்பிட்டுவிடுங்கள்: சுற்றுலாத்துறை மந்திரி சொல்கிறார்
Published on

திருவனந்தபுரம்,

மத்திய சுற்றுலாத்துறை மந்திரி அல்போன்ஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, மாட்டிறைச்சிக்கு சில மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், அது நாட்டின் சுற்றுலாவை பாதிக்குமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இக்கேள்விக்கு பதிலளித்த அல்போன்ஸ், இந்தியா வருவதற்கு முன் அவர்கள் (சுற்றுலாப்பயணிகள்) தங்கள் சொந்த நாட்டிலேயே மாட்டிறைச்சி சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று கிண்டலாக பதிலளித்தார்.

முன்னதாக புவனேஷ்வரில் இந்திய சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டமைப்பின் நிகழ்ச்சியில் பேசிய கேஜே அல்போன்ஸ், மிகவும் பழமையான நாடு இந்தியா. ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை வந்து பார்வையிடலாம். நமது வரலாறையும் நமது தேசத்தையும் நாம் நேசிக்க வேண்டும். இந்த அழகான நாட்டை நீங்கள் காண வேண்டும் என்று சுற்றுலாப்பயணிகளிடம் நாம் கூற வேண்டும் என்றார்.

கடந்த திங்கள் கிழமை மத்திய சுற்றுலாத்துறை மந்திரியாக பொறுப்பேற்றுக்கொண்ட கேஜே அல்போன்ஸ், மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா மாநிலங்களுக்கு எந்த வித உணவு கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை என்றார். பாரதீய ஜனதா ஆட்சி நடக்கும் கோவாவில், மக்கள் தொடர்ந்து மாட்டிறைசி சாப்பிடுகின்றனர். கேரளாவிலும் தொடர்ந்து சாப்பிட முடியும். பாரதீய ஜனதாவுக்கு இந்த விவகாரத்தில் உண்மையிலேயே எந்த பிரச்சினையும் இல்லை என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com