உ.பி. இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மோசடி பாராளுமன்றம் - சட்டசபையில் அமளி

உத்தரபிரதேச இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். #GorakhpurByPollResult
உ.பி. இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மோசடி பாராளுமன்றம் - சட்டசபையில் அமளி
Published on

புதுடெல்லி/லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் கோரக்பூர் மற்றும் புல்பூர் தொகுதிகளில் நடைபெற்ற பாராளுமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் பா.ஜனதா தொடர்ந்து பின்னடவை சந்தித்து வருகிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் கோரக்பூரில் மோசடி நடைபெறுவதாக எதிர்க்கட்சிகள் பாராளுமன்றம் மற்றும் உத்தரபிரதேச சட்டசபையில் அமளியில் ஈடுபட்டனர். பாராளுமன்ற மக்களவையில் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெறுகிறது என காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கடும் அமளியில் ஈடுபட்டது. பாரதீய ஜனதாவிற்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது.

கோரக்பூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் சமாஜ்வாடி முன்னிலை பெற்றதும் மீடியாவிற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டது. இவ்விவகாரத்தை உத்தரபிரதேச சட்டசபையில் எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் 10 நிமிடங்கள் அவை ஒத்திவைக்கப்பட்டது. மீடியாக்கள் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்றும் வாக்கு எண்ணிக்கை தொடர்பான தகவல்களை பெற மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு உள்ளன.

தேர்தல் ஆணையம் விளக்கம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் மீடியாவிற்கு அனுமதி மறுப்பு என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் தெரிவித்தது.

தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து மீடியாக்கள் உள்ளேதான் இருக்கிறது. இவிஎம் இயந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள பகுதிகளுக்கு மீடியாக்கள் அனுமதிக்கப்படக்கூடாது என அறிவுரையை தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் மீடியாக்களுக்கு என்ற தனியாக இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணிக்கை விபரம் மீடியாக்களுக்கு தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com