செருப்பை வைத்திருந்த ஊழியர்...! சர்ச்சையில் சிக்கிய மந்திரி ரோஜா.. !

ஆந்திராவின் சுற்றுலாத்துறை மந்திரியாக இருக்கும் நடிகை ரோஜா, கடற்கரையில் இறங்கியபோது ஊழியர் ஒருவர் அவரது செருப்பைப் சுமக்க வற்புறுத்தியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
செருப்பை வைத்திருந்த ஊழியர்...! சர்ச்சையில் சிக்கிய மந்திரி ரோஜா.. !
Published on

விசாகபட்டினம்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த ரோஜா, சமீபத்தில் தீவிர அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரோஜா தற்போது ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மந்திரியாக உள்ளார். மந்திரி ரோஜா ஆந்திர மாநிலம் பாபட்லா சூர்யலங்கா கடற்கரைக்கு சென்றார்.

அங்கு ரோஜா கடல் நீரில் இறங்கி மகிழ்ச்சியுடன் கடற்கரை ஓரமாக நடந்தார். கடற்கரையில் சிறிது நேரம் கழித்தார்கள்.கடல் நீரில் இறங்கியபோது ரோஜாவின் செருப்பை வேலைக்காரரின் கையில் கொடுத்து இருந்தார். தற்போது இது சர்ச்சைக்குரியதாக மாறி உள்ளது. இது குறித்து சில வீடியோக்கள், புகைப்படங்கள் வெளிவந்து உள்ளது. மந்திரியாக இருந்தாலும் ஊழியர் செருப்பு சுமப்பதை ஏற்க முடியாது என்ற விமர்சனங்கள் எழுந்தன.

சூர்யா லங்காவின் சுற்றுலாத் தலத்துக்குச் சென்ற மந்திரி ரோஜா, சுற்றுலாத்துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். பாபட்லா சூர்யலங்கா கடற்கரை சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.சூர்யலங்கா கடற்கரையை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதற்கான பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும். விசாகப்பட்டினத்திற்குப் பிறகு சூர்யலங்கா மிக முக்கியமான கடற்கரை இதுவாகும். சூர்யலங்கா கடற்கரைக்கு அதிக சுற்றுலாப் பயணிகளை வருமாறு ரோஜா கேட்டுக் கொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com