

பிஜாப்பூர்,
சத்தீஷ்காரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பதுங்கியிருந்து சண்டை போட்ட 2 நக்சலைட்டுகளை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.
இதுபற்றி பஸ்தார் சரக ஐ.ஜி. சுந்தர்ராஜ் கூறும்போது, கொல்லப்பட்ட 2 நக்சலைட்டுகளிடம் இருந்து ஏ.கே.-47 ரக துப்பாக்கி, 9 மி.மீ. ரக பிஸ்டல் ஒன்று மற்றும் பிற பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. தொடர்ந்த பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர் என்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிஜாப்பூர் மாவட்டத்தின் கர்ரேகுட்டா மலை பகுதியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு கொண்டு தாக்குதல் நடத்தியதில் வீரர்கள் 11 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் நலம் பெற்று வருகின்றனர்.
பிஜாப்பூர் மாவட்டத்தில் பஸ்தார் சரகத்தில் கடந்த 18-ந்தேதி நடந்த என்கவுன்ட்டரில் 6 நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.