ஜம்மு காஷ்மீர் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடி

ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீர் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளில் முதற்கட்டமாக 24 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. காஷ்மீரில் 16 தொகுதிகளுக்கும், ஜம்முவில் 8 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். தேர்தலை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடத்தி முடிக்க வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் ராணுவத்தினர், துணை ராணுவத்தினர் மற்றும் காஷ்மீர் போலீசார் நிறுத்தப்பட்டு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், "ஜம்மு காஷ்மீர் தேர்தலில் அனைத்து மக்களும் அதிக அளவில் வாக்களித்து ஜனநாயகத்தின் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும்; இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com