வங்கிகள் கடன் தர மறுத்ததால், சிறுநீரகத்தை விற்க துணிந்த விவசாயி !

உத்தர பிரதேசத்தில் வங்கிகள் கடன் தர மறுத்ததால், தனது சிறுநீரகத்தை விற்க துணிந்த விவசாயி ஒருவர் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளார்.
வங்கிகள் கடன் தர மறுத்ததால், சிறுநீரகத்தை விற்க துணிந்த விவசாயி !
Published on

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் உள்ள சஹாரான்பூர் மாவட்டத்தில் சட்டர் சாலி கிராமத்தில் வசிக்கும் விவசாயி ராம்குமார் (30), தனது கடன் கேரிக்கைகளை வங்கிகள் நிராகரித்ததால், தனது உறவினர்களிடமிருந்து வாங்கிய கடனை திருப்பி செலுத்த வேறு வழியில்லாமல் தனது சிறுநீரகம் ஒன்றை விற்க தயாராக இருப்பதாக தெரிவித்து சுவரொட்டிகளை ஒட்டியுள்ளார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராம்குமார், பிரதான் மந்திரி கோசல் விகாஸ் யோஜனா மையத்தின் கீழ் பால் பண்ணை படிப்பை முடித்ததாகவும், அந்த சான்றிதழை காட்டி கால்நடைகள் வாங்கவும், பண்ணை அமைக்கவும் அரசாங்க வங்கிகளில் கடன் கேட்டுள்ளார். வங்கிகள் கடன் தர மறுத்ததை தொடர்ந்து, தனது உறவினர்களிடமிருந்து கடன் வாங்கியுள்ளார்.

இதையடுத்து அவரது உறவினர்கள் தங்கள் பணத்தை வட்டியுடன் திருப்பித் தருமாறு அவருக்கு அழுத்தம் கொடுத்ததால், வேறு வழியில்லாமல் தனது சிறுநீரகத்தை விற்க முடிவெடுத்து சுவரொட்டிகளை ஒட்டியுள்ளார்.

இது குறித்து சஹரன்பூர் ஆணையர் சஞ்சய் குமார் கூறியதாவது :-

இந்த விவகாரம் குறித்து அரசு முறையான விசாரணையை உறுதி செய்யும் என்றும், அதன் பிறகுதான் ராம்குமாருக்கு வங்கிகள் கடன் தர மறுத்தது ஏன் என்பது தெரியும் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com