உத்தர பிரதேசத்தில் பணய கைதிகளான 20 குழந்தைகள், சில பெண்கள் மீட்கும் பணி தீவிரம்

உத்தர பிரதேசத்தில் வீடு ஒன்றில் பணய கைதிகளாக வைக்கப்பட்ட 20 குழந்தைகள், சில பெண்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
உத்தர பிரதேசத்தில் பணய கைதிகளான 20 குழந்தைகள், சில பெண்கள் மீட்கும் பணி தீவிரம்
Published on

லக்னோ,

உத்தர பிரதேசத்தின் முகமதாபாத் நகரில் கார்தியா கிராமத்தில் சுபாஷ் கவுதம் என்ற குடிகார போதை ஆசாமி ஒருவர் தனது மகள் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி சில குழந்தைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்படி சென்ற 20 குழந்தைகள் மற்றும் சில பெண்களை அந்த போதை ஆசாமி பணய கைதிகளாக பிடித்து வைத்து உள்ளார். கொலை குற்றவாளியான கவுதம், எம்.எல்.ஏ. மற்றும் எஸ்.பி. வரவேண்டும் என கூறியுள்ளார். இதுபற்றி அறிந்து, ஆசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்ற சதீஷ் சந்திரா துபே என்பவர் துப்பாக்கியால் சுடப்பட்டார்.

இதேபோன்று போலீசார் மீதும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. வெடிகுண்டும் வீசப்பட்டது. இதில் 3 போலீசார் மற்றும் கிராமவாசி ஒருவர் காயமடைந்தனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்தவுடன் போலீசார் அந்த பகுதிக்கு சென்றனர். துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டு உள்ளது. அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இதனை அடுத்து மூத்த காவல் துறை அதிகாரிகளும் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றுள்ளனர்.

தீவிரவாத ஒழிப்பு படை மற்றும் கமாண்டோ படையினரும் உடனடியாக அங்கு சென்றுள்ளனர் என டி.ஜி.பி. ஓ.பி. சிங் கூறியுள்ளார். தேவைப்பட்டால் தேசிய பாதுகாப்பு படையும் வரவழைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com