விசைத்தறி தொழிலுக்கு ஜி.எஸ்.டி.யை தள்ளுபடி செய்ய வேண்டும் - ஜெகத்ரட்சகன் எம்.பி. பேச்சு

விசைத்தறி தொழிலுக்கு ஜி.எஸ்.டி.யை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஜெகத்ரட்சகன் எம்.பி. பேசினார்.
விசைத்தறி தொழிலுக்கு ஜி.எஸ்.டி.யை தள்ளுபடி செய்ய வேண்டும் - ஜெகத்ரட்சகன் எம்.பி. பேச்சு
Published on

புதுடெல்லி,

அரக்கோணம் எம்.பி. ஜெகத்ரட்சகன், நாடாளுமன்றத்தில் பேசியதாவது:-

அரக்கோணம் தொகுதியில் விசைத்தறி தொழிலாளர்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். சுமார் 80 ஆயிரம் பேர், விசைத்தறி தொழிலை தான் வாழ்வாதாரமாக நம்பி இருக்கின்றனர். நூல் கொள்முதல் செய்யும்போது, நூல் சாயம் பூசப்படும்போது, நெய்யப்பட்ட துணி விற்பனைக்கு வரும்போது என இந்த 3 நிலைகளிலும் ஜி.எஸ்.டி விதிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே விசைத்தறி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே மத்திய அரசு விசைத்தறி தொழிலுக்கு ஜி.எஸ்.டி.யை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். இலவச மின்சாரம் வழங்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். விசைத்தறி தொழிலாளர்கள் பணியில் இருக்கும்போது இறந்தால், அவர்களின் குடும்பத்துக்கு மாதம் ரூ.6 ஆயிரம் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்.

விசைத்தறி தொழிலாளர் பிள்ளைகளுக்கு உயர்கல்வியில் உதவ வேண்டும். திருத்தணியில் ஜவுளி பூங்கா அமைத்து தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com