பஞ்சாப்: முன்னாள் காங்கிரஸ் தலைவர் அகாலி தளத்தில் இணைந்தார்

மொகிந்தர் சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சிரோமனி அகாலி தளத்தில் இணைந்துள்ளார்.
image courtesy: PTI
image courtesy: PTI
Published on

சண்டிகார்,

பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ் தலைவரும் ஜலந்தர் நாடாளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி.யுமானவர் மொகிந்தர் சிங் காய்பி. தலித் தலைவரான இவர் காங்கிரஸ் ஆட்சியின்போது மத்திய மந்திரியாக பதவி வகித்தவர். கடந்த 2017-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு சிரோமனி அகாலி தள வேட்பாளரிடம் தோற்றார்.

இந்த நிலையில் மொகிந்தர் சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சிரோமனி அகாலி தளத்தில் இணைந்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் ஜலந்தர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு மொகிந்தருக்கு வழங்கப்படும் என சிரோமனி அகாலி தளம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com