எரிபொருட்களின் விலை குறைய துவங்கி உள்ளது: பெட்ரோலியதுறை மந்திரி தர்மேந்திர பிரதான் தகவல்

எரிபொருட்களின் விலை குறைய துவங்கி உள்ளது என்று பெட்ரோலியதுறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
எரிபொருட்களின் விலை குறைய துவங்கி உள்ளது: பெட்ரோலியதுறை மந்திரி தர்மேந்திர பிரதான் தகவல்
Published on

அகமதாபாத்,

பெட்ரோல், டீசல் விலையை எண்ணைய் நிறுவனங்கள் தினமும் நிர்ணையித்துக்கொள்ளலாம் என்ற அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. இதன்பிறகு பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றியமைக்கப்பட்டது. கடந்த சில தினங்களாக பெட்ரோல்,டீசல் விலை தினமும் ஏறுமுகமாகவே இருந்தது. இதற்கு அரசியல்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அதேபோல், சமூக வலைதளங்களிலும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

இத்தகைய சூழலில், எரிபொருட்களின் விலை தற்போது குறைய துவங்கி இருப்பதாக பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியதாவது:- எரிபொருள்களின் விலை குறைய துவங்கியுள்ளது. கடந்த இரு தினங்களாக பெட்ரோல் விலை குறைந்து வருகிறது.

அமெரிக்காவில் ஏற்பட்ட இர்மா புயல் காரணமாக பெட்ரோலிய சந்தையில் நிலையற்ற தன்மை நிலவியது. இதுவே பெட்ரொல் விலை ஏற்றத்திற்கு காரணம். பெட்ரோலிய பொருட்களையும் ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வரவேண்டும் என்று ஜி.எஸ்.டி கவுன்சிலிடம் நான் கோரிக்கை வைக்கிறேன். நாட்டு மக்கள் நலனை இந்த நடவடிக்கை உறுதி செய்யும். மத்திய மாநில அரசுகளின் நலனும் இதன்மூலம் பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com