முதல் ஜி எஸ் டி தாக்கலை கடைசி நிமிடத்தில் செய்ய வேண்டாம் - ஜிஎஸ்டி தலைவர் கோரிக்கை

தங்களது முதல் ஜிஎஸ்டி கணக்குத் தாக்கலை கடைசி நிமிடம் வரை தள்ளிப்போட வேண்டாம் என்று ஜிஎஸ்டி தலைவர் நவீன் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதல் ஜி எஸ் டி தாக்கலை கடைசி நிமிடத்தில் செய்ய வேண்டாம் - ஜிஎஸ்டி தலைவர் கோரிக்கை
Published on

புதுடெல்லி

வரும் 20 ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி கணக்குத் தாக்கல் செய்யும் இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மில்லியன் கணக்கான வணிகர்கள் இன்னும் தங்களது கணக்கை தயார் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. மொத்தமாக கணக்குகளை தாக்கல் செய்ய பதிவு செய்துள்ள 34 ஜிஎஸ்டி வரி செலுத்த உதவி செய்யும் நிறுவனங்களில் ஏறக்குறைய சரிபாதி மட்டுமே கணக்குகளை பதிவேற்றம் செய்ய இறுதி அனுமதியை பெற்றுள்ளன என்றார் நவீன்.

ஜிஎஸ்டி வரி செலுத்தும் இணையதளம் ஒவ்வொரு மாதமும் 3 பில்லியன் ரசீதுகளை பதிவேற்றம் செய்யும் ஆற்றல் பெற்றுள்ளது. இதனால் கடைசி நிமிடத்தில் அனைவரும் அவசரமாக கணக்கு தாக்கல் செய்ய முனைந்தாலும் இணைய தளம் முடங்கி போகாது. கடைசி நிமிடத்தில் சுமார் 50 சதவீதம் பேர் கணக்குத் தாக்கல் செய்ய முனைவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது வரி செலுத்தி வரும் 7 மில்லியன் வரி செலுத்துவோர் தங்களது கணக்கை துவங்கியுள்ளனர். எனினும் இன்னும் மூன்றில் ஒரு பங்கினர் வரி செலுத்த தேவையான படிவத்தை நிரப்பவில்லை என்றார் நவீன். தவிர 1.3 மில்லியன் புதிய வணிகர்களும் பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே மதிப்பு கூட்டு வரியை இணைய தளத்தில் பதிவேற்றி வந்ததையும் அதனால் இதில் சிரமங்கள் ஏதும் இருக்காது என்றும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com