ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்: கோவாவில் 20-ந் தேதி நடக்கிறது

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் கோவாவில் 20-ந் தேதி நடக்கிறது. இதில் வரி குறைப்பு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்: கோவாவில் 20-ந் தேதி நடக்கிறது
Published on

புதுடெல்லி,

நாட்டின் பொருளாதார நிலை மந்தமாக உள்ளது. முக்கிய தொழில் துறைகளின் வளர்ச்சியில் சரிவு காணப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார வளர்ச்சி 5 சதவீதம் என்ற குறைவான அளவில் உள்ளது.

இதனால் பொருளாதார வளர்ச்சிக்கு முட்டு கொடுக்கிற வகையில் சரக்கு, சேவை வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை, தொழில் துறை சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அப்படி செய்கிறபோது, பொருட்களின் பயன்பாடு அதிகரிக்கும். உற்பத்தியும் பெருகும்.

இந்த நிலையில், ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் கோவாவில் 20-ந் தேதி நடக்கிறது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடக்கிற கூட்டத்தில் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

இந்த கூட்டத்தில் பிஸ்கெட் முதல் மோட்டார் வாகனங்கள் வரை வரி குறைப்பு முடிவு எடுத்து அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com