குஜராத் தொங்கு பாலம் விபத்து: ஆற்றின் அடியில் சிக்கியுள்ள உடல்களை மீட்கும் பணி தீவிரம்!

ஆற்றின் அடியில் சிக்கியுள்ள உடல்களை மீட்கும் பணிக்காக ஆழ்கடல் நீச்சல் பயிற்சி பெற்ற வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
குஜராத் தொங்கு பாலம் விபத்து: ஆற்றின் அடியில் சிக்கியுள்ள உடல்களை மீட்கும் பணி தீவிரம்!
Published on

ஆமதாபாத்,

குஜராத்தின் மோர்பி நகரில் வரலாற்று சிறப்புமிக்க தொங்கு பாலம் கடந்த 30-ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) திடீரென இடிந்து விழுந்தது.

பாலத்தில் 500-க்கும் மேற்பட்டோர் இருந்ததால் அதிக பாரம் தாங்காமல் அந்த கேபிள் பாலம் இடிந்து விழுந்துள்ளது.இந்த சம்பவத்தில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், பலர் மீட்கப்பட்டும் உள்ளனர். சிலர் சிகிச்சையில் உள்ளனர். தொடர்ந்து மீட்பு, நிவாரண பணிகள் நடந்து வருகின்றன.

தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் இதுவரை 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் ஆற்றின் அடியில் சிக்கியுள்ள உடல்களை மீட்கும் பணி இன்றும் தொடருகிறது. இதற்காக ஆழ்கடல் நீச்சல் பயிற்சி பெற்ற வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மீட்புப்பணி குறித்து தேசிய பேரிடர் மீட்புப்படை அதிகாரி விவிஎன் பிரசன்ன குமார் கூறுகையில், "ஆற்றின் அடியில் சிலரது உடல்கள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதற்காக ஆழ்கடல் நீச்சல் பயிற்சி பெற்ற வீரர்கள் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணிகள் தீவிரமாக தொடர்ந்து நடந்து வருகின்றன" என்று கூறினார்.

இந்திய கடற்படை, கடலோர காவல்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை மற்றும் உள்ளூர் நிறுவனங்கள் என பல குழுக்கள் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com