காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: பயங்கரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீரில் துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: பயங்கரவாதி சுட்டுக்கொலை
Published on

பாரமுல்லா,

காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் கிரீரி பகுதியில் உள்ள சலூசா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு ராஷ்டிரீய ரைபிள்ஸ், ஜம்மு சிறப்பு பாதுகாப்பு படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் அடங்கிய பாதுகாப்பு படையினர் நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

குறிப்பிட்ட இடத்தை கடந்து சென்றபோது, பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். உடனே சுதாரித்துக்கொண்ட வீரர்கள் பதிலடி கொடுத்தனர். சிறிதுநேரம் நீடித்த இந்த சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். ஆனால் அவர் எந்த பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. துப்பாக்கி சண்டை நடந்த பகுதியில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

காஷ்மீரில் கடந்த 17-ந்தேதி நடந்த தாக்குதல் தொடர்பான வீடியோவை பயங்கரவாதிகள் வெளியிட்டனர். இது சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, ஒரு பயங்கரவாதி தற்போது சுட்டுக்கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com