

சிம்லா,
இமாசலபிரதேச முன்னாள் முதல்-மந்திரி வீரபத்ர சிங்கி கடந்த மார்ச் 3-ந்தேதி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இந்தநிலையில் ஏப்ரல் 14-ந்தேதி அவருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின்னர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வீடுதிரும்பினார்.
இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. சோதனை முடிவில் அவருக்கு புதிய வகை கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதியானது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.