

தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு கற்பழிப்பு வழக்கில் கடந்த ஆகஸ்டு 25ந்தேதி 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் பஞ்ச்குலா பகுதியில் ஏற்பட்ட வன்முறைக்காக ராம் ரஹீமின் வளர்ப்பு மகள் ஹனிபிரீத் இன்சான் அரியானா போலீசாரால் தேடப்படும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், ஹனிபிரீத்தின் முன்னாள் கணவரான விஸ்வாஸ் குப்தா கடந்த வாரம் சண்டிகாரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்பொழுது, தேரா சச்சா தலைவருக்கு எதிராக பேசியதற்காக கொலை செய்யப்படலாம் என தனது அச்சத்தினை வெளிப்படுத்தினார்.
விஸ்வாஸ் மற்றும் ஹனிபிரீத் கடந்த 1999ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் 2011ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.
இந்த நிலையில் போலீசாரிடம் விஸ்வாஸ் அளித்துள்ள புகாரில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார் என தெரிவித்துள்ளார்.
போலீசார் இந்த புகாரை பெற்று கொண்டு விசாரணை செய்து வருகின்றனர். விஸ்வாசுக்கு பாதுகாப்பும் வழங்கப்பட்டு உள்ளது.