

இது தொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப தங்களுக்கு மானிய விலை உணவு தானியங்கள் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு மாநிலங்கள் கேட்பதாக உணவு அமைச்சகம் எங்களிடம் தெரிவித்தது. இதில் உணவு மானியம் மிகவும் விரைவான விகிதத்தில் உயர்வதாக அமைச்சகம் கவலை தெரிவித்தது. எனவே என்ன வகையான கொள்கை நடவடிக்கைகளை பற்றி நாம் சிந்திக்க வேண்டும் என ஆய்வு செய்தோம். அதன்படி மத்திய அரசின் நிதி ஆதாரங்களை பாதிக்காமல், தேவைப்படுபவர்களுக்கு மானிய விலையில் உணவு தானியங்களை வழங்குவதை உறுதி செய்ய பல்வேறு வழிகள் பரிந்துரைக்கப்பட்டன.
அதேநேரம் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மானிய விலை உணவு தானியங்களை குறைப்பதாக உணவு அமைச்சகம் கூறவில்லை. எனவே நிதி ஆயோக் வெவ்வேறு வழிகளை உருவாக்கியது. அதில் ஒன்று, 3-ல் 2 பங்கினருக்கு (67 சதவீத மக்கள்) மானிய விலை உணவு தானிய வினியோகத்தை தொடர கூறியது.
இவ்வாறு ரமேஷ் சந்த் தெரிவித்தார்.