காஷ்மீரில் கடந்த 5 ஆண்டுகளில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல்கள் அதிகரிப்பு

ஜம்மு காஷ்மீரில் கடந்த 5 ஆண்டுகளில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
காஷ்மீரில் கடந்த 5 ஆண்டுகளில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல்கள் அதிகரிப்பு
Published on

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஐஇடி மற்றும் சக்திவாய்ந்த வெடிகுண்டு தாக்குதல்கள் அதிகரித்துள்ளது, கடந்த 2018-ம் ஆண்டில் 57 சதவீதம் உயர்ந்துள்ளது. நக்சலைட் தீவிரவாதம் அதிகமாக இருக்கும் மாநிலங்களில் இத்தாக்குதல்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது என்று ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு படையின் தேசிய வெடிகுண்டு புள்ளிவிவர மையம் தரப்பில் டெல்லியில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதியைக் கொண்டுள்ள காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2014-ம் ஆண்டில் ஐஇடி தாக்குதல்கள், வெடிகுண்டு தாக்குதல்கள் 37 சம்பவங்கள் நடந்திருந்தன. இதுவே கடந்த 5 ஆண்டுகளில் இது படிப்படியாக அதிகரித்துள்ளது. 2015-ம் ஆண்டு 46 தாக்குதல்களும், 2016-ம் ஆண்டில் 69 தாக்குதல்களும், 2017-ம் ஆண்டில் 70 தாக்குதல்களும், கடந்த ஆண்டில் 117 தாக்குதல்களும் நடந்துள்ளன.

புல்வாமா தாக்குதல் தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஜம்மு காஷ்மீரில் சக்திவாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் நடக்கும் அளவு, சக்திவாய்ந்த வெடிபொருட்கள் மூலம் நாசவேலைகளில் ஈடுபடுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் 57 சதவீதம் உயர்ந்துள்ளது அதேசமயம் நாட்டின் மற்ற பகுதிகளில் வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்கள் கணிசமாகக் குறைந்துள்ளன. ஜம்மு காஷ்மீரில் மட்டும் தொடர்ந்து அதிகரித்தவாறு இருந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com