மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி: மத்திய அரசின் முடிவுக்கு அகிலேஷ் யாதவ் வரவேற்பு

மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி அளிக்கும் மத்திய அரசின் முடிவை அகிலேஷ் யாதவ் வரவேற்றுள்ளார்.
மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி: மத்திய அரசின் முடிவுக்கு அகிலேஷ் யாதவ் வரவேற்பு
Published on

லக்னோ,

மாநிலங்களுக்கு இலவசமாகத் தடுப்பூசி வழங்கும் மத்திய அரசின் முடிவை வரவேற்பதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். அகிலேஷ் யாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

மக்களின் கோபத்தை உணர்ந்த பிறகு, கொரோனா தடுப்பூசியைக் கொண்டு அரசியல் செய்யாமல் தானே தடுப்பூசிகளை விநியோகிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பாஜகவின் தடுப்பூசிக்குத்தான் நாங்கள் எதிர்ப்பு. இந்திய அரசின் தடுப்பூசியை வரவேற்கிறோம்.

நானும் தடுப்பூசி செலுத்திக்கொள்வேன். தடுப்பூசி பற்றாக்குறையால் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com