கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு 30 கோடி தலித்களுக்கு எதுவும் செய்யவில்லை பா.ஜ.க எம்.பி. பிரதமருக்கு கடிதம்

கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு 30 கோடி தலித்களுக்கு எதுவும் செய்யவில்லை என பாரதீய ஜனதா எம்.பி. பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். ஏற்கனவே இது போல் 2 எம்.பி.க்கள் கடிதம் எழுதி உள்ளனர். #BJP
கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு 30 கோடி தலித்களுக்கு எதுவும் செய்யவில்லை பா.ஜ.க எம்.பி. பிரதமருக்கு கடிதம்
Published on

காசியாபாத்

உத்தரபிரதேசத்தைச்சேர்ந்த பாரதீய ஜனதா தலித் எம்பி நாட்டின் தலித்துகள் மீதான தார்மீக நடவடிக்கை குறித்து மோடியிடம் புகார் அளித்துள்ளார்.

உத்தரபிரதேசம் நஜினா தொகுதியைச் சேர்ந்த பாரதீய ஜனதா தலிம் எம்.பி யஷ்வந்த் சிங் பிரதமருக்கு எழுதி உள்ளகடிதத்தில் கூறி இருப்பதாவது;-

தலித் என்பதால் தான் என் திறமைகளை பயன்படுத்த முடியவில்லை இட ஒதுக்கீடு காரணமாக நான் எம்.பி. ஆனேன். இந்த நாட்டில் உள்ள 30 கோடி தலித்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக மத்திய அரசு எதுவும் செய்யவில்லை. என கூறி உள்ளார். பிரதமருக்கு இவ்வாறு கடிதம் எழுதி உள்ள 3 வது தலித் எம்பி இவர் ஆவார்.

பி.ஜே.பி அதன் 38 வது நிறுவன தினத்தை கொண்டாடும் போது எடவாவின் பி.ஜே.பி தலித் எம்.பி., அசோக் தோஹ்ரே தொலைக்காட்சிகளுக்கு இது போல் பேட்டி அளித்தார். அப்போது தான் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளதாக கூறினார்.

தோஹ்ரே ஏப்ரல் 2 ம் தேதி பாரத் பந்தில் அன்று தலித்துகளுக்கு எதிராக போலீஸ் மிருகத்தனமான தாக்குதலை நடத்தியதாக குற்றச்சாட்டுகளை வைத்தார். தலித் இளைஞர்களை அவர்களது வீடுகளிலிருந்து இழுத்துச் சென்று அவர்களைத் துன்புறுத்திக் கொன்றனர். என குற்றம்சாட்டினார்.

இது போல் ரோப்ர்கஞ்சை சேர்ந்த தலித் எம்பி. சோட்டே லால் கர்வார் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தங்களது சொந்த அரசின் கீழ் உள்ள தலித்துகளுக்கு எதிரான அட்டூழியங்களை நடத்திவருவதாக பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார். யோகி ஆதித்யநாத் சந்திக்க சென்றபோது, அவரை அலுவலகத்தில் இருந்து விரட்டியதாக முதல்வர் மீது குற்றம் சாட்டி இருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com