சென்னை உள்பட பல நகரங்களில் 65 இன்டிகோ, கோஏர் விமான போக்குவரத்து ரத்து

பாதுகாப்பு கருதி குறிப்பிட்ட என்ஜின் பொருத்தப்பட்ட ஏ320 நியோ விமானங்களை உடனடியாக நிறுத்திவைக்கும்படி இன்டிகோ விமான போக்குவரத்து அலுவலகம் உத்தரவிட்டதால் சென்னை உள்பட பல நகரங்களில் 65 இன்டிகோ, கோஏர் விமான போக்குவரத்து ரத்தாகியுள்ளது.
சென்னை உள்பட பல நகரங்களில் 65 இன்டிகோ, கோஏர் விமான போக்குவரத்து ரத்து
Published on

மும்பை,

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து ஆமதாபாத் திரும்பிய இன்டிகோ விமானம் நடுவானில் எந்திர கோளாறு ஏற்பட்டதால் 40 நிமிடங்கள் தாமதமாக வந்தது. இதனால் விமான போக்குவரத்து டைரக்டர் ஜெனரல் அலுவலகம், பாதுகாப்பு கருதி குறிப்பிட்ட என்ஜின் பொருத்தப்பட்ட ஏ320 நியோ விமானங்களை உடனடியாக நிறுத்திவைக்கும்படி உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து குறைந்த கட்டண விமான போக்குவரத்து நிறுவனங்களான இன்டிகோ 47 விமானங்களையும், கோஏர் 18 விமானங்களையும் நிறுத்திவைத்தது. இதனால் சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர், ஐதராபாத், ஸ்ரீநகர் உள்ளிட்ட பல நகரங்களில் அந்த விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த விமானங்களில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் வேறு விமானங்களில் செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் அல்லது டிக்கெட்டை ரத்து செய்து முழு கட்டணத்தையும் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com