கள்ளக்காதலியுடன் காரில் சென்ற தந்தையை வழிமறித்து தாக்கிய மகள்கள்

ராஜஸ்தானில் இரண்டு சிறுமிகள் தங்கள் தந்தையை நடுரோட்டில் வைத்து தாக்கிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கள்ளக்காதலியுடன் காரில் சென்ற தந்தையை வழிமறித்து தாக்கிய மகள்கள்
Published on

ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் உள்ள ஹனுமான் நகரில் உள்ள குசல்வாரா சாலை அருகே இரண்டு சிறுமிகள் ஒரு காரை மறித்து உள்ளனர். ஆனால் அந்த கார் நிற்கவில்லை. உடனடியாக அப்பகுதி மக்கள் தலையிட்டு காரை நிறுத்தி உள்ளனர்.

உடனடியாக அந்த சிறுமிகள் காரில் இருந்த ஆண் ,பெண் இருவரையும் தாக்கி உள்ளனர் இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

அவர்கள் அந்த மனிதரை தாக்கும் போது இரண்டு மகள்கள் இருக்கும்போது வேறு ஒரு பெண்ணுடன் காதல் வயப்பட்டதற்கு வெட்கமாக இல்லையா? என்று கேட்டுக்கொண்டே அடித்தனர்.

அந்த பகுதி மக்கள் கேட்டபோது காரில் வந்தவர் தங்களது தந்தை என்றும் மற்றொரு பெண்ணுடன் தங்கள் தந்தையின் தொடர்பு வீட்டின் அமைதியை குலைத்து விட்டது என கூறினர். இந்த திருமணத்திற்கு புறம்பான உறவால் தங்கள் தாய் கஷ்டத்தை அனுபவிப்பதாகவும் தங்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

ஆனால் இது குறித்து வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com