

மும்பை,
மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,216 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்து 46 ஆயிரத்து 287 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 3,423 பேர் குணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 58 ஆயிரத்து 971 ஆக உயர்ந்துள்ளது. இதன்படி குணமடைவோர் விகிதம் 95.73 சதவிகிதமாக உள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பால் 15 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 51,325 ஆக உயர்ந்துள்ளது. இதன்படி இறப்பு விகிதம் 2.51 சதவிகிதமாக உள்ளது. தற்போது கொரோனா தொற்று பாதிப்புடன் 34,720 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.